மதுரை : ''வெற்றிகரமான ஒரு சமுதாய வாழ்க்கைக்கு உலகியல் மற்றும் ஆன்மிக முன்னேற்றம் இரண்டும் தேவை,'' என, மதுரை ராமகிருஷ்ண மடத்தில் நடந்த தேசிய இளைஞர் தின விழாவில் அதன் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் பேசினார்.
சுவாமி விவேகானந்தர் பிறந்த நேரமான காலை 6:31 மணிக்கு சங்கு ஊதி, மணியடித்து சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சிறப்பு பஜனை, ஆராதனை நடந்தன.சுவாமி கமலாத்மானந்தர் பேசியதாவது: பண்டைய வேதாந்தமும், நவீன விஞ்ஞானமும் இணைந்த வலிமை வாய்ந்த இந்தியா உருவாக வேண்டும் என்று விவேகானந்தர் வலியுறுத்தினார். தீண்டாமை கூடாது என வாழ்ந்தும் காட்டினார். ஒவ்வொரு மனிதரிடமும் தெய்வீகம் புதைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் விவேகானந்தரின் கருத்துக்களால் ஊக்கம் பெற்றதாக தெரிவித்துள்ளனர். கல்வியறிவு அற்றவர்கள், ஆதரவற்றவர்கள் நிலையிருந்து நாம் பிறக்கு உதவ வேண்டும், என்றார்.சுவாமி தத்பிரபானந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE