ஒவ்வொருவரும் மனதை அடக்க முயற்சி செய்ய வேண்டும்: எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒவ்வொருவரும் மனதை அடக்க முயற்சி செய்ய வேண்டும்: எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன் பேச்சு

Added : ஜன 13, 2021
Share
மதுரை : ''ஒவ்வொருவரும் மனதை அடக்க முயற்சி செய்ய வேண்டும். பேராசை, வஞ்சனை போன்ற எண்ணங்களை தவிர்க்க வேண்டும்,'' என, மதுரையில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் நடந்த மஹா பெரியவா ஆராதனை நிகழ்வில் எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன் பேசினார்.'சுந்தர காண்டம்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: அனுமனின் பேராற்றல் மூலம் ஒருவருக்கு எப்படி தடை வருகிறது, அதை எப்படி எதிர்கொள்ள

மதுரை : ''ஒவ்வொருவரும் மனதை அடக்க முயற்சி செய்ய வேண்டும். பேராசை, வஞ்சனை போன்ற எண்ணங்களை தவிர்க்க வேண்டும்,'' என, மதுரையில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் நடந்த மஹா பெரியவா ஆராதனை நிகழ்வில் எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன் பேசினார்.

'சுந்தர காண்டம்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: அனுமனின் பேராற்றல் மூலம் ஒருவருக்கு எப்படி தடை வருகிறது, அதை எப்படி எதிர்கொள்ள முடியும் என்பதை அறிந்து கொள்ள முடியும். அனுமன் லட்சுமணனால் சொல்லின் செல்வன், வீரன் என பாராட்டப் பெற்றவர். ஒருவருக்கு ராம எண்ணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். துன்பத்தில் இருந்து மீள முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் அனுமன்.

மகான்களின் தரிசனம் கிடைத்தால் பாவமோட்சம் கிடைக்கும். ஒரு பெண் மஹா பெரியவாளிடம் சென்று, 'என் வாழ்க்கை கானல் நீராக இருக்கிறது,' என்றார். மஹா பெரியவா அவரிடம், 'தினமும் சுந்தரகாண்டம்' பாராயணம் செய். அது மருந்து,' என்றார். சுந்தரகாண்டம் பாராயணம் செய்தால் நமக்குள் அருள் வட்டம் உருவாகும். நமக்குள்ள தடைகள் நீங்கும், என்றார்.முன்னதாக அனுமன் ஜெயந்தியையொட்டி வெங்கடேசபாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தனை நடந்தது. ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரஹம் நிறுவனர் நெல்லைபாலு செய்திருந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X