சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்...

Added : ஜன 13, 2021
Share
Advertisement
மது விற்றவர் கைதுமேலுார்: தெற்குத்தெரு கூட்டுறவு வங்கி அருகில் மது விற்ற ஊன்றுகால்பட்டி ராமநாதனை 75, மேலுார் போலீசார் கைது செய்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.வாகனம் மோதி மூதாட்டி பலிதிருமங்கலம்: மேலக்கோட்டை விலக்கில் நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமுற்றார். திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்

மது விற்றவர் கைது

மேலுார்: தெற்குத்தெரு கூட்டுறவு வங்கி அருகில் மது விற்ற ஊன்றுகால்பட்டி ராமநாதனை 75, மேலுார் போலீசார் கைது செய்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

வாகனம் மோதி மூதாட்டி பலி

திருமங்கலம்: மேலக்கோட்டை விலக்கில் நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமுற்றார். திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மூதாட்டி மற்றும் மோதிய வாகனம் குறித்து தாலுகாபோலீசார் விசாரிக்கின்றனர்.

கார் கவிழ்ந்து வங்கி மேலாளர் காயம்

கொட்டாம்பட்டி: திருச்சி தினேஷ் 40, சென்ட்ரல் வங்கியில் முதுநிலை மேலாளராக பணிபுரிகிறார். உடல் நலக்குறைவால் மதுரையில் இறந்த தந்தை துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க நண்பரின் காரை வாங்கி ஓட்டிச் சென்றார். வஞ்சிநகரம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. காயம்பட்ட தினேஷ் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். எஸ்.ஐ., பழனியப்பன் விசாரிக்கிறார்.

சிறுமி திருமணம்: வாலிபர் கைது

சோழவந்தான்: ஆலங்கொட்டாரம் பிரபாகரன் 30. இவர் உறவினரான 16 வயது சிறுமியுடன் பழகியுள்ளார். ஆலங்கொட்டாரம் பாட்டி வீட்டில் இருந்த சிறுமியை பிரபாகரன் நவ.,13 கடத்தி திருமணம் செய்தார். சிறுமி இரு மாத கர்ப்பமாக உள்ளார். சமூகநலத்துறை அலுவலர் புகாரின்படி போலீசார் போக்சோவில் பிரபாகரனை கைது செய்தனர்.

குழந்தை மூச்சு திணறி பலி

சோழவந்தான்: அரியலுார் மகேந்திரன் 28. சோழவந்தான் மேலபச்சேரி அபிராமி 22. இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளாகிறது. நேற்றுமுன்தினம் இரவு அனுஸ்ரீ என்ற ஒன்றரை வயது குழந்தைக்கு அபிராமி பால் புகட்டிய போது அசைவின்றி இருந்தது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X