பொது செய்தி

தமிழ்நாடு

தோட்டக்கலை விவசாயிகளுக்கு மாவட்ட, மாநில விருதுகள்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
மதுரை : சிறந்த தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும்விவசாயிகளுக்கு வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் தலா பத்து பேருக்கு விருதுகள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.காய்கறிகள் சாகுபடியில்சாதனையாளர் விருது, பழங்கள் சாகுபடி, சுவை தாளிதப்பயிர், மூலிகை, வாசனை திரவியப் பயிர், மலைப்பயிர், மலர்கள் சாகுபடி, நுண்ணீர்ப் பாசன தொழில்நுட்பத்திற்கான சாதனையாளர் விருது, உயர்

மதுரை : சிறந்த தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும்விவசாயிகளுக்கு வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் தலா பத்து பேருக்கு விருதுகள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

காய்கறிகள் சாகுபடியில்சாதனையாளர் விருது, பழங்கள் சாகுபடி, சுவை தாளிதப்பயிர், மூலிகை, வாசனை திரவியப் பயிர், மலைப்பயிர், மலர்கள் சாகுபடி, நுண்ணீர்ப் பாசன தொழில்நுட்பத்திற்கான சாதனையாளர் விருது, உயர் தொழில்நுட்ப சாகுபடி, பாதுகாக்கப்பட்ட சாகுபடிக்கான சாதனையாளர் விருது, அங்கக, இயற்கை விவசாயத்திற்கான சாதனையாளர் விருது, புதிய, தனித்துவம் மிக்க, மாவட்டத்திற்கே சிறப்பிற்குரிய தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கான சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த சொந்த நிலம் உள்ள விவசாயிகள் இந்த பத்து பிரிவுகளின் கீழ் போட்டியிடலாம். ஒரு விவசாயி வட்டார அளவில் ஒரு விருதிற்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். வெற்றி பெறுபவர்கள் மாவட்ட, மாநில விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படுவர்.www.tnhorticulture.tn.gov.in இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, ரூ.100 விண்ணப்ப கட்டணத்துடன், வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். இத்தகவலை கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X