புகார் பெட்டி - தேனி

Added : ஜன 13, 2021
Share
Advertisement
சாக்கடை பாலம் சேதம்ஆண்டிபட்டி பேரூராட்சி திருவள்ளுவர் காலனி முதல் தெருவில் சாக்கடை பாலம் சேதமடைந்துள்ளது. இரவில் இப்பகுதி கடந்து செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- கே.முத்துமணி, சக்கம்பட்டிபள்ளத்தால் பாதிப்புதேசிய நெடுஞ்சாலை மதுரை -- தேனி ரோடு ஆண்டிபட்டி பால விநாயகர் கோயில் எதிரில் ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளம் விபத்து

சாக்கடை பாலம் சேதம்

ஆண்டிபட்டி பேரூராட்சி திருவள்ளுவர் காலனி முதல் தெருவில் சாக்கடை பாலம் சேதமடைந்துள்ளது. இரவில் இப்பகுதி கடந்து செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- கே.முத்துமணி, சக்கம்பட்டி

பள்ளத்தால் பாதிப்பு

தேசிய நெடுஞ்சாலை மதுரை -- தேனி ரோடு ஆண்டிபட்டி பால விநாயகர் கோயில் எதிரில் ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளம் விபத்து ஏற்படுத்துவதாக உள்ளது. மழைநீர் பள்ளத்தில் தேங்குவதால் பலருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.காளிமுத்து,

ஆண்டிபட்டிரோடு சீரமைக்கப்படுமா

போடி அருகே காமராஜபுரம் விவேகானந்தர் தெருவில் ரோடு அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. டூவீலரில் செல்லும் போது டயர் பஞ்சர் ஆகிறது. சீரமைக்க ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர். ராமசாமி, காமராஜபுரம்.

மண் குவியலால் விபத்து

போடி பஸ்ஸ்டாண்டில் இருந்து கிருஷ்ணாநகர் வரை ரோட்டின் இருபுறமும் மண்குவியல்களாக உள்ளன. வாகனங்கள் வேகமாக செல்லும் போது வெளியேறும் துாசிகள் நடந்து செல்வோரின் கண்களை பதம் பார்க்கிறது. வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.சந்திரகுமார், போடி.

சிரமத்தில் மக்கள்

போடி ரெங்கநாதபுரம் -- சிலமலை பைபாஸ் ரோட்டில் 'குடி'மகன்கள் மதுகுடித்து விட்டு பாட்டில்களை உடைத்து ரோட்டில் வீசுகின்றனர். இதனால் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள் சிரமப்படுகின்றனர். இதில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஜி. கனகராஜ், பி.ரெங்கநாதபுரம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X