பொது செய்தி

தமிழ்நாடு

நீர் பிடிப்பு பகுதியில் தொடரும் மழை; மஞ்சளாறு அணை நீர்மட்டம் உயர்வு

Added : ஜன 13, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி : நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52 அடியாக உயர்ந்தது.மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் மழை பெய்தால் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் உயரும். மொத்த உயரம் 57 அடி. பாதுகாப்பு கருதி 55 அடிவரை மட்டும் தேக்கமுடியும்.2020 நவ.29ல் முதல் போகம் நெல் பாசனத்திற்கு தண்ணீர்

தேவதானப்பட்டி : நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52 அடியாக உயர்ந்தது.

மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் மழை பெய்தால் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் உயரும். மொத்த உயரம் 57 அடி. பாதுகாப்பு கருதி 55 அடிவரை மட்டும் தேக்கமுடியும்.2020 நவ.29ல் முதல் போகம் நெல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 2021 மார்ச் 15 வரை தண்ணீர் வழங்கப்படும். ஜன.5ல் நீர் மட்டம் 48 அடியாக குறைந்தது.

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் நேற்று வினாடிக்கு 90 கனஅடி நீர் வரத்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 52 அடியாக உயர்ந்தது. பாசனத்திற்காக 50 கனஅடி வெளியேற்றப்படுகிறது. 10 மி.மீ., மழை பதிவானது.முதல்போகம் நெல் சாகுபடி விவசாயிகள், மற்ற பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர். அணையால் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பகுதிகளில் 3148 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, நிலக்கோட்ைட பகுதிகளில் 2111 ஏக்கர் என மொத்தம் 5259 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X