தேனி : தேனியில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி கலையரசியை குண்டர் தடுப்புச்சட்டத்தில் வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.
தர்மாபுரி மந்தைக்குளம் தெரு கலையரசி 36. இவரது கணவர் கடமலைக்குண்டு மேலப்பட்டி முத்துக்காளை 39. முத்துக்காளை சமையல் பணியாக கேரளா செல்வார். இதனால் கலையரசிக்கும் கட்டட தொழிலாளி சேதுபதிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கலையரசியை முத்துக்காளை கண்டித்துள்ளார். இதனிடையே மேலப்பட்டி கணேசன் என்பவரிடம் தனது கணவரை கொலை செய்ய ரூ.1 லட்சம் கொடுப்பதாக பேசி அதில் ரூ.10 ஆயிரம் முத்துக்காளையும், மீதிப்பணத்தை கலையரசியும் வழங்க சம்மதித்தனர். 2020 நவ. 2 ல் தர்மாபுரி
கடமலைக்குண்டு ரோடு முருங்கைத் தோட்டத்தில் கணேசன், முத்துக்காளையை இரும்புக்கம்பியால் அடித்து கொலை செய்தார். உடலை தோட்ட கிணற்றில் வீசிச் சென்றனர். இவ்வழக்கில் கள்ளக்காதலன் சேதுபதி, கணேசன் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கூட்டுச்சதி செய்து கொலை செய்த கலையரசி, சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., பரிந்துரையில் கலெக்டர் பல்லவிபல்தேவ் உத்தரவில் வீரபாண்டி போலீசாரால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE