உணவு பதப்படுத்தும் தொகுப்பு பூங்கா அமைக்க தீவிரம்!| Dinamalar

தமிழ்நாடு

உணவு பதப்படுத்தும் தொகுப்பு பூங்கா அமைக்க தீவிரம்!

Added : ஜன 13, 2021
Share
மத்திய அரசு பிரதம மந்திரி கிஸான் சம்படா யோஜனா திட்டத்தில் தேனி மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொகுப்பு பூங்கா அமைக்க அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து கோட்டூரில் அரசு புறம்போக்கு நிலம் 10 ஏக்கரில் உணவு பூங்கா அமைக்க ரூ.26.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான நிலம் கையகப்படுத்தி வேளாண் வணிக துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. உணவுப்பூங்காவில் 5000 மெ.டன் இருப்பு வைக்க

மத்திய அரசு பிரதம மந்திரி கிஸான் சம்படா யோஜனா திட்டத்தில் தேனி மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொகுப்பு பூங்கா அமைக்க அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து கோட்டூரில் அரசு புறம்போக்கு நிலம் 10 ஏக்கரில் உணவு பூங்கா அமைக்க ரூ.26.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான நிலம் கையகப்படுத்தி வேளாண் வணிக துறைக்கு ஒப்படைக்கப்பட்டது.

உணவுப்பூங்காவில் 5000 மெ.டன் இருப்பு வைக்க குளிர்பதன கிடங்கு, 8000 மெ. டன் உணவு பொருட்கள் இருப்பு வைக்க கோடவுன், 100 மெ.டன் பொருட்கள் பதப்படுத்தும் அறை ஆகியவை பொது பயன்பாட்டிற்காக அமைக்கப்படும்.இங்கு ஐந்து முதலீட்டாளர்களுக்கு தொழில் துவங்க வாடகை முறையில் இடம் ஒதுக்கப்படும்.

அவர்களால்முருங்கை பதப்படுத்துதல், நெல்லி, மாம்பழ கூழ் ஜூஸ் தயாரித்தல், மக்காச்சோளம் ஸ்டார்ச் தயாரிப்பு, தேங்காயில் தயாராகும் சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் அமைக்கப்படும். கட்டுமானப்பணிகள் மிக விரைவில் துவங்கப்பட உள்ளது. விரைவில் முதலீட்டாளர்கள் கூட்டம் நடத்தி தகுதியுள்ளவர்களுக்கு தொழில் துவங்க அனுமதி வழங்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X