பொது செய்தி

தமிழ்நாடு

விவேகானந்தர் பிறந்தநாள் விழா

Added : ஜன 13, 2021
Share
Advertisement
தேனி : தேனி நேரு சிலை அருகே சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் கொண்டாடப்பட்டது. பொறுப்பாளர் தர்ம ஜாக்ரன் தலைமை வகித்தார். நிர்வாகி உதயகுமார் வரவேற்றார். மக்கள் தொடர்பாளர் மகேந்திரன் ,சுற்றுச்சூழல் பொறுப்பாளர் மோகன், ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜ், நிர்வாகிகள் ஆச்சி கார்த்திக், சிவக்குமார்,

தேனி : தேனி நேரு சிலை அருகே சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் கொண்டாடப்பட்டது. பொறுப்பாளர் தர்ம ஜாக்ரன் தலைமை வகித்தார். நிர்வாகி உதயகுமார் வரவேற்றார்.

மக்கள் தொடர்பாளர் மகேந்திரன் ,சுற்றுச்சூழல் பொறுப்பாளர் மோகன், ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜ், நிர்வாகிகள் ஆச்சி கார்த்திக், சிவக்குமார், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் தினேஷ் கண்ணன், கார்த்திகேயன் விவேகானந்தர் படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தனர்.*சீலையம்பட்டி இந்து நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு செயலர் சண்முகநாதன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சோமசுந்தரபாண்டியன் வரவேற்றார். சமூக இடைவெளியுடன் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். விவேகானந்தர் குறித்த பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வை ஆசிரியை கனகாம்புஜம் தொகுத்து வழங்கினார்.ஆண்டிபட்டிஹிந்து முன்னணி சார்பில் இளைஞர் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டது. சுவாமி விவேகானந்தர் படத்துடன் வைகை ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை இளைஞர் எழுச்சி கோஷமிட்டு ஊர்வலம் சென்றனர். பின்னர் படத்திற்கு மாலை அணிவித்தனர். ஹிந்து முன்னணி இளைஞர் அணி அமைப்பு செயலாளர் மனோஜ்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வசந்த், இளைஞர் அணி தலைவர் தினேஷ் குமார் முன்னிலை வகித்தனர். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட செயற்குழுமொக்கராஜ் ஆகியோர் விவேகானந்தரின் வரலாறு குறித்து பேசினர். நகர் செயலாளர் பால்பாண்டி, இளைஞர் அணி நிர்வாகிகள் சந்தோஷ்குமார், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கம்பம்காமயகவுண்டன்பட்டி விவேகானந்தர் இளைஞர் மன்றத்தின் சார்பில் அவரது பிறந்தநாள் இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விவேகானந்தர் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இளைஞர் மன்ற தலைவர் ஜேப்பியார் தலைமை வகித்தார். நகர்நலக்கமிட்டி தலைவர் மோகன்தாஸ், நாலந்தா பள்ளி தாளாளர் விஸ்வநாதன், ஓய்வூதியர் சங்க தலைவர் அரங்கசாமி, முன்னாள் சேர்மன் சாந்திரவீந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சித்தா டாக்டர் சிராசுதீன், கபசுர குடிநீர் வழங்கினார். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை இளைஞர் மன்றத்தினர் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X