மூணாறு : கேரளா மூணாறில் பொங்கல் பண்டிகையையொட்டி வரத்து குறைந்ததால் ஒரு கரும்பு ரூ.50க்கு விற்கப்படுகிறது.
மூணாறுக்கு பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் தேனி,மதுரை ஆகிய மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்பு கொண்டு வரப்பட்டு விற்கப்படும்.இந்தாண்டு கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை ஆகியவற்றால் கரும்பு வரத்து வெகுவாக குறைந்தது. கடந்த காலங்களில் லாரிகளில் 10 முதல் 15 லோடு ககொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது5 லோடு கரும்பு கொண்டு வரபப்பட்டுள்ளது. வரத்து குறைந்ததால் ஒரு கரும்பு ரூ.50க்கு விற்கப்படுகிறது.கொரோனாவால் பண்டிகை களை இழந்துள்ளதாலும், விலை அதிகம் என்பதாலும் கரும்பு விற்பனை எதிர்பார்த்தது போன்று நடக்குமா என விற்பனையாளர்கள்கவலையடைந்துள்ளனர்.--------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE