தேனி : தேனி ஒன்றியத்தில் ஆறு கிராமங்களில் அம்மா மினிகிளினிக்குகளை துணை முதல்வர் பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.இம் மாவட்டத்தில் கிராமப்புற மக்கள் மருத்துவ வசதி பெறும் நோக்கில் ஏற்கனவே 15 மினி கிளினிக்குள் துவக்கப்பட்டுள்ளன. மேலும் 23 கிளினிக்குள் துவக்க கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
நேற்று தேனி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீலையம்பட்டி, தர்மாபுரி, குப்பிநாயக்கன்பட்டி, வெங்கடாஜலபுரம், தாடிச்சேரி, அரண்மனைப்புதுாரில் துணை முதல்வர் ,மினி கிளினிக்குகளை துவக்கி வைத்தார். சீலையம்பட்டியில் ரூ. 9.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டிய அங்கன்வாடியை துவக்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து பெட்டலங்களை வழங்கினார். இவற்றில் கலெக்டர் பல்லவி பல்தேவ் ,ஜக்கையன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிதலைவர் ப்ரீதா, பொது சுகாதார துறை துணை இயக்குனர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE