பொது செய்தி

தமிழ்நாடு

பொதுத்தேர்வு பாடங்களை தெரிவிக்க வலியுறுத்தல்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : '10, 12 ம் வகுப்பில் குறைக்கப்பட்ட பாடத்திட்ட அறிக்கையை வெளியிட வேண்டும்' என, உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.நிறுவன தலைவர் மாயவன், மாநில செய்தித் தொடர்பாளர் முருகேசன் கூறியது: பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12 ம் வகுப்பு மாணவர்கள் நலன் கருதி ஜன.19 முதல் பள்ளிகளை திறக்க முதல்வர் அனுமதி அளித்ததற்கு நன்றி. ஒன்பதாம் வகுப்பு

திண்டுக்கல் : '10, 12 ம் வகுப்பில் குறைக்கப்பட்ட பாடத்திட்ட அறிக்கையை வெளியிட வேண்டும்' என, உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

நிறுவன தலைவர் மாயவன், மாநில செய்தித் தொடர்பாளர் முருகேசன் கூறியது: பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12 ம் வகுப்பு மாணவர்கள் நலன் கருதி ஜன.19 முதல் பள்ளிகளை திறக்க முதல்வர் அனுமதி அளித்ததற்கு நன்றி. ஒன்பதாம் வகுப்பு வரை 50 சதவீதமாக பாடங்கள் நடப்பு கல்வியாண்டில் குறைக்கப்பட்டுள்ளன. இதே போல் 10,11,12 ம் வகுப்புகளுக்கும் 35 சதவீதமாக பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இதற்காக, அமைக்கப்பட்ட 'சிலபஸ்' குறைப்பு குழு சமர்பித்த அறிக்கை தயாரான நிலையில், இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் 10, 12 ம் வகுப்பு மாணவர்கள் குறைக்கப்பட்ட பகுதிகள் எது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால் கற்றல் கற்பித்தல் பணிக்கு குறைவான காலமே இருப்பதால் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்து உடனே அறிக்கை வெளியிட வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X