பழநி : பழநி முருகன்கோயில் உண்டியல் கடந்த 2020ஆம் ஆண்டு நவ.,24க்கு பின் நேற்று திறந்து எண்ணப்பட்டது. 48 நாட்களில் ரூ. 4 கோடியே 14 லட்சத்து 87 ஆயிரம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள், வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் 48 நாட்களுக்கு பின் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்தது.இருநாட்களிலும் காணிக்கை ரூ. 4 கோடியே 14 லட்சத்து 57 ஆயிரத்து 830 ம், தங்கம் -1038 கிராம், வெள்ளி- 30 ஆயிரத்து 617 கிராம், வெளிநாட்டு கரன்சிகள்- 120 கிடைத்துள்ளது.
நேற்றைய எண்ணிக்கையில் காணிக்கை தொகை ரூ.1 கோடியே 28 லட்சத்து 43 ஆயிரத்து 090 ம், தங்கம்- 124 கிராம், வெள்ளி - 2 ஆயிரத்து 726 கிராம், வெளிநாட்டு கரன்சி 43 கிடைத்துள்ளது. செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE