திண்டுக்கல் : தேனியில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுளளார்.
தேனி மாவட்டம் உத்தமபளையத்தில் உதயம், உதயநிலா, உதய தாமரை என 3 நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. மூன்றுக்கும் முக்கிய நபரான அஜிஸ்கான் என்பவர் இறந்து போனதால் உடனிருந்தவர்கள் நிறுவனங்களை மூடிவிட்டு பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 3 பேரை கைது செய்ததோடு 5 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளி தலைமறைவான ஜமாலுதீன் 68, என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE