நிதி நிறுவன மோசடி: மேலும் ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிதி நிறுவன மோசடி: மேலும் ஒருவர் கைது

Added : ஜன 13, 2021
Share
திண்டுக்கல் : தேனியில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுளளார்.தேனி மாவட்டம் உத்தமபளையத்தில் உதயம், உதயநிலா, உதய தாமரை என 3 நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. மூன்றுக்கும் முக்கிய நபரான அஜிஸ்கான் என்பவர் இறந்து போனதால் உடனிருந்தவர்கள் நிறுவனங்களை மூடிவிட்டு பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக

திண்டுக்கல் : தேனியில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுளளார்.

தேனி மாவட்டம் உத்தமபளையத்தில் உதயம், உதயநிலா, உதய தாமரை என 3 நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. மூன்றுக்கும் முக்கிய நபரான அஜிஸ்கான் என்பவர் இறந்து போனதால் உடனிருந்தவர்கள் நிறுவனங்களை மூடிவிட்டு பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 3 பேரை கைது செய்ததோடு 5 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளி தலைமறைவான ஜமாலுதீன் 68, என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X