பொது செய்தி

இந்தியா

நெல் பயிருக்கான ஊக்கத் தொகையை முந்தைய மானியமாக வழங்க கோரிக்கை

Added : ஜன 13, 2021
Share
Advertisement
பாகூர் : நெல் பயிருக்கான ஊக் கத் தொகை முந்தைய மானியமாக வழங்கும் அறிவிப்பை நடைமுறைக்கு கொண்டு வர கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் வேண் டுகோள் விடுத்துள்ளார். அவரது அறிக்கை: புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் நிவர், புரெவி புயல் காரணமாக பெய்த மழையில் நெல், மணிலா, வாழை பயிர்கள் சேதமாகின. விவசாயிகளின்

பாகூர் : நெல் பயிருக்கான ஊக் கத் தொகை முந்தைய மானியமாக வழங்கும் அறிவிப்பை நடைமுறைக்கு கொண்டு வர கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் வேண் டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் நிவர், புரெவி புயல் காரணமாக பெய்த மழையில் நெல், மணிலா, வாழை பயிர்கள் சேதமாகின. விவசாயிகளின் கோரிக்கையை யேற்று எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்தது.ஆனால், புதுச்சேரி அரசு நிவாரணம் எதுவும் அறிவிக்கவில்லை. மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் சில தினங்களாக பெய்த மழையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் பாதித்தன. இது விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான பிரிமிய தொகையை, காப்பீடு நிறுவனத்திற்கு, அரசு செலுத்தி விட்டது.

பாதித்த விவசாயிகளுக்கு, காப்பீடு நிறுவனம் 3 ஆண்டுகளாக இழப்பீடு வழங்கவில்லை. மேலும், நெல், கரும்பு, வாழை பயிர்களுக்கு, 3 பருவங்களுக்கான, ஊக்க தொகை வழங்கவில்லை. அதேபோல், நெல் பயிருக்கான ஊக்கத் தொகை முந்தைய மானியமாக வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை. இவ்விஷயங்களில், கவர்னர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X