கள்ளக்குறிச்சி : கரடிசித்துாரில் ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தினை மீட்டு தரக்கோரி போயர் இன மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து கரடிசித்துார் போயர் இன மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்துாரில் வசிக்கும் போயர் இன மக்களுக்காக அரசு இடம் வழங்கியது. அவ்விடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வேல் மற்றும் சுவாமி சிலைகளை நட்டு குலசாமி பூஜைகளை செய்து வந்தோம். இந்நிலையில், தனி நபர் ஒருவர் சுவாமி சிலைகள் மற்றும் வேலினை அகற்றி பெட்டிக் கடை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.ஆக்கிரமிப்புகளை காலி செய்யக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
இதனால், நாங்கள் குலதெய்வ வழிபாடு இன்றி தவித்து வருகிறோம். எனவே, தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி, அவ்விடத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE