தியாகதுருகம் : தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளங்கள் 5 ஆண்டுக்கு பின் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தியாகதுருகம் ஒன்றியத்தில் 39 ஏரிகள், 239 குளங்கள் உள்ளன.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 6 ஏரிகளும் மற்றவை கிராம ஊராட்சி பராமரிப்பில் உள்ளது.கடந்த 2015 ம் ஆண்டு பெய்த தொடர் கனமழையால் ஒன்றியத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. அதன் பின்னர் எதிர்பார்த்த மழையின்றி விவசாயம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக நெல் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து விட்டது.கரும்பு பயிர்களுக்கு கோடைக்காலத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு கருகும் அபாயம் தொடர்ந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள 90 சதவீத ஏரிகள் நிரம்பி உள்ளது.இதேபோல் ஒன்றியத்தின் வழியே செல்லும் கோமுகி மற்றும் மணிமுக்தா ஆற்றில் கட்டப்பட்டுள்ள 2 தடுப்பணைகள் நிரம்பி வழிவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.5 ஆண்டுக்கு பிறகு நீர்வளம் அதிகரித்து பயிர் சாகுபடிக்கு கைகொடுத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE