உளுநதுார்பேட்டை : எம்.எஸ்.தக்கா- பு.கொணலவாடி பகுதியில் புதியதாக போடப்பட்ட தார் சாலை ஓரிரு மாதங்கள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் சேதமடைந்துள்ளது
பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.உளுந்துார்பேட்டை அடுத்த எம்.எஸ். தக்கா பகுதியிலிருந்து பு. கொணலவாடி பகுதி வரை உள்ள சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக போடப்பட்டது. அதன்பிறகு அச்சாலை குண்டும் குழியுமாக மாறியதோடு பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக இருந்து வந்தது. இதனால் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் உளுந்துார்பேட்டை சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும், சிமெண்ட் சாலைகள் பொது நிதி திட்டத்தின் கீழ் எம்.எஸ்.தக்கா- பு.கொணலவாடி இடையே 4.50 கிலோமீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்க ரூபாய் ஒரு கோடியே 57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதியை
தார்சாலை அமைக்கும் பணிகள் கடந்த மார்ச் 6ம் தேதி உளுந்துார்பேட்டை அடுத்த மூலசமுத்திரம் கிராமத்தில் குமரகுரு எம்.எல்.ஏ., தார்சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார்.ஆனால் அப்பணிகள் உடனடியாக துவங்காமல் கடந்த நவம்பரில் தார்சாலை பணிகள் துவங்கி ஒரு வாரத்திற்குள் முடிவடைந்தது. இந்நிலையில் தார் சாலை போடப்பட்டு ஓரிரு மாதங்கள் கூட ஆகாத நிலையில், சாலை பழுதடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்தது. எம்.எல்.ஏ., தொகுதி நிதி மூலம் போடப்பட்ட சாலை முறையாக போடப்பட்டதா என அதிகாரிகள் ஆய்வு செய்திருந்தால் இது போன்ற தவறுகளை தடுத்திருக்கலாம்.
மீண்டும் சாலை சேதமடைந்ததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே தார் சாலை பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை எடுத்து சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE