சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

Added : ஜன 13, 2021
Share
Advertisement
ஊத்துக்கோட்டை : ஆரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், இதன் வழியே அமைக்கப்பட்டு, அணைக்கட்டுகள் நிரம்பி உபரி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரி மலைக்குன்றுகளுக்கு இடையே உருவாகும் ஆரணி ஆறு, ஆந்திர மாநிலத்தில், 65.20 கி.மீட்டர் துாரம் பயணித்து, பிச்சாட்டூர், சுருட்டப்பள்ளி வழியே, தமிழக எல்லையான ஊத்துக் கோட்டையை அடைக்கிறது.அங்கிருந்து, சிட்ரபாக்கம், பனப்பாக்கம்,

ஊத்துக்கோட்டை : ஆரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், இதன் வழியே அமைக்கப்பட்டு, அணைக்கட்டுகள் நிரம்பி உபரி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நகரி மலைக்குன்றுகளுக்கு இடையே உருவாகும் ஆரணி ஆறு, ஆந்திர மாநிலத்தில், 65.20 கி.மீட்டர் துாரம் பயணித்து, பிச்சாட்டூர், சுருட்டப்பள்ளி வழியே, தமிழக எல்லையான ஊத்துக் கோட்டையை அடைக்கிறது.அங்கிருந்து, சிட்ரபாக்கம், பனப்பாக்கம், கல்பட்டு, செங்காத்தாக் குளம், பாலேஸ்வரம், ஏ.என்.குப்பம், லட்சுமி புரம் ஆகிய பகுதிகள் வழியே, 66.40 கி.மீட்டர் துாரம் பயணித்து, பழவேற்காடு அருகே, புலிக்காட் எனும் இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது.தமிழக பகுதிகளில், ஐந்து தடுப்பணை மற்றும் மூன்று அணைக்கட்டுகள் உள்ளன.

வடகிழக்குப் பருவ மழை துவங்கிய நிலையில், வங்கக் கடலில் உருவான, 'நிவர், புரெவி' புயல்களால், பலத்த மழை பெய்தது.இதனால், ஆரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆந்திராவில், பிச்சாட்டூர் ஏரி, சுருட்டப்பள்ளி அணைக்கட்டு ஆகியவை நிறைந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.தமிழக பகுதியில், சிட்ரபாக்கம், பனப்பாக்கம், கல்பட்டு, செங்காத்தா குளம், பாலேஸ்வரம், ஏ.என்.குப்பம், லட்சுமிபுரம் அணைக்கட்டு மற்றும் தடுப்பணைகள் நிறைந்து, உபரி நீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின், ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் நிரம்பி வழிவது, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X