தமிழ்நாடு

ஏற்பாடு! ஆறு இடங்களில் கொரோனா தடுப்பூசி போட...களப்பணியில் சுகாதார துறையினர் தீவிரம்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தாய்சேய்
 ஏற்பாடு! ஆறு இடங்களில் கொரோனா தடுப்பூசி போட...களப்பணியில் சுகாதார துறையினர் தீவிரம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தாய்சேய் நல அலுவலர் சின்னப்பொண்ணு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சதீஷ்குமார் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 217 துணை சுகாதார நிலையங்கள், 36 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 வட்டார சுகாதார நிலையங்கள் உள்ளன. இதுதவிர மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள 44 அம்மா மினி கிளினிக்குகள், 7 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு 5 ஆயிரம் பிரசவங்கள் நடந்துள்ளன. இவை அனைத்தும் சுகபிரசவம் தான்.பிறந்து இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2019-20ம் ஆண்டில் 339 ஆகவும், 2020 - 21ல் 206 ஆகவும் உள்ளது. மகப்பேறு மரணங்களின் எண்ணிக்கை 2019-20ம் ஆண்டு 21, 2020-21ல் 12 ஆக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டெங்குவால் 379 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2020ம் ஆண்டு 85 பேர் மட்டுமே பாதிப்படைந்தனர். மலேரியாவால் 2019ம் ஆண்டு 20 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில் 2020ம் ஆண்டு 2 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.

டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஒரு ஒன்றியத்திற்கு 40 பேர் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 108 ஆக உள்ளது. இம்மாதத்திற்குள்( ஜனவரி) கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைகள், எலவனாசூர் கோட்டை, தியாகதுருகம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு தனியார் மருத்துவமனை என மொத்தம் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.

முதற்கட்டமாக டாக்டர், செவிலியர், டிரைவர், முன்களப்பணியாளர் என விருப்பத்தின் பேரில் 6 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். இதனையடுத்து முதியவர்கள், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் என படிப்படியாக தடுப்பூசி போடப்படுகிறது. கொரோனா தடுப்பூசி மருந்துகள் சேமித்து வைப்பதற்கு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் கிடங்கு தயாராக உள்ளது. இருவிதமான தடுப்பூசிகள் வரவுள்ளதால் , இதற்காக 2 - 8 டிகிரி செல்சியஸ், மற்றும் 20 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் பாதுகாப்பான முறையில் மருந்துகள் வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடப்படும் நபர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவார். மாவட்டத்தில் தற்போது இரு மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனா வார்டு இயங்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில், கொரோனா முதன்மை மருத்துவ கண்காணிப்பு அலுவலர் சிவக்குமார், மாவட்ட பயிற்சி மருத்துவர் மணிரத்தினம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சுந்தர்பாபு, சுகாதார ஆய்வாளர், வைத்தியநாதன், நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன், நேர்முக உதவியாளர் ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X