இலவச சைக்கிள் வழங்கல்..//| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச சைக்கிள் வழங்கல்..//

Added : ஜன 13, 2021
Share
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த திருப்பாலப்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. திருக்கோவிலுார் அடுத்த திருப்பாலப்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு, தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்றார். கீழத்தாழலுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், பெற்றோர்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த திருப்பாலப்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

திருக்கோவிலுார் அடுத்த திருப்பாலப்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு, தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்றார். கீழத்தாழலுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளமுருகு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர். அ.தி.மு.க., ஒன்றிய விவசாய அணி செயலாளர் முருகன், நிர்வாகிகள் மணிவண்ணன், தண்டபாணி, ஜோதிலிங்கம், கணேசன், சுந்தரம், தேவா, பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர்கள் அருள்முருகன், ரமேஷ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X