காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் அடுத்த செரப்பணஞ்சேரியில், 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, பழமையான வீமிஸ்வரர் கோவில், இடிந்த நிலையில் உள்ளது.துாங்கானை மாடக்கோவில் வகையில் அமைக்கப்பட்ட இந்த கோவிலின் கருவறை மண்டபத்தை சுற்றிலும், ஏராளமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
ஹிந்து அறநிலையத்துறை, இந்த கோவிலை கண்டு கொள்ளாத நிலையில், சிவ பக்தர்கள் இணைந்து பராமரித்து, பூஜை செய்து வருகின்றனர். இடிந்த நிலையில் உள்ள இந்த கோவிலில், 6 அடி உயர கல் துாண் ஒன்றில், கல்லால் தட்டினால், வெவ்வேறு ஒலி வருகிறது.வீமிஸ்வரர் கோவில் குருக்கள் பி.மகாலிங்கலம் கூறியதாவது:கல்லை குடைந்து, பல கலை சிற்பங்களை உருவாக்கிய சிற்பிகள், அரியதாக கருதப்படும் இசைத் துாண்களையும் உருவாக்கி உள்ளனர். தமிழகத்தில், சில கோவில்களில் மட்டும் இசைத்துாண்கள் காணப்படுகின்றன. அதுபோன்ற இசைத் துாண், இந்த கல் துாணாக இருக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE