பொது செய்தி

தமிழ்நாடு

4 தடுப்பணைகளுக்கு அரசாணை

Added : ஜன 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பாலாற்றில் நான்கு தடுப்பணைகளுக்கான அரசாணை அறிவிப்பு, சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியிடப்படுமா என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது, பாலாற்றில், ஏழு இடங்களில் தடுப்பணை கட்டப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ஈசூர் - வள்ளிபுரம், கல்பாக்கம் அடுத்த வாயலுார் என, இரு இடங்களில் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

பாலாற்றில் நான்கு தடுப்பணைகளுக்கான அரசாணை அறிவிப்பு, சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியிடப்படுமா என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது, பாலாற்றில், ஏழு இடங்களில் தடுப்பணை கட்டப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, ஈசூர் - வள்ளிபுரம், கல்பாக்கம் அடுத்த வாயலுார் என, இரு இடங்களில் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக, உள்ளாவூரில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. அறிவிக்கப்பட்ட ஏழு இடங்களில், மூன்று இடங்களுக்கு மட்டுமே அரசாணை பிறப்பிக்கப்பட்டு, தடுப்பணை பணிகள் நடைபெற்று வருகின்றன.உதயம்பாக்கம், பாலுார், வெங்குடி, வெங்கடாபுரம் என, இன்னும் நான்கு இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டிய தேவை இருப்பதால், அதற்கான அரசாணை எப்போது பிறப்பிக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சட்டசபை தேர்தல் நடைபெற, சில மாதங்களே உள்ள நிலையில், நிதி ஒதுக்கீடு செய்ய குறுகிய கால அவகாசமே உள்ளது.ஆட்சி முடியும் நிலையில், இன்னும் நான்கு தடுப்பணைக்கான நிதி ஒதுக்கீடு வருமோ அல்லது விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், இம்மாதமே நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து, காஞ்சிபுரம் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ரமேஷிடம் கேட்டபோது, ''இம்மாதம் இறுதிக்குள், வெங்குடி மற்றும் வெங்கடாபுரம் என, இரு தடுப்பணைகளுக்கு அரசாணை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

தொடர்ந்து, மற்றவற்றுக்கும் அரசாணை வரும் என நம்புகிறோம்,'' என்றார்.தடுப்பணைகள் விபரம்வெங்குடி தடுப்பணை - ரூ.52.1 கோடி மதிப்பீடுநீளம் - 660 மீட்டர் பாசன வசதி - 2,039 ஏக்கர் நிலம்பயன்பெறும் கிராமங்கள் - அவளூர், தம்மனுார், ஆசூர், மேல்புத்துார், கீழ்புத்துார், கீழ்பெரமநல்லுார், மேல்பெரமநல்லுார், வில்லிவலம் மற்றும் காலுார்.ஏரிகளின் நீர்மட்டம் உயர்த்துவதுடன், வாலாஜாபாத் பேரூராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பாலாறு கிணறுகளில் நீர்மட்டம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

---வெங்கடாபுரம் தடுப்பணை - ரூ.67.5 கோடி மதிப்பீடுநீளம் - 940 மீட்டர் பாசன நிலங்கள் - 2,746 ஏக்கர்பயன்பெறும் கிராமங்கள் - விஷார், மேல்கதிர்பூர், கீழ்கதிர்பூர், நரப்பாக்கம், செவிலிமேடு, விப்பேடு, தேனம்பாக்கம், கோளிவாக்கம், புஞ்சையரசந்தாங்கல், வளத்தோட்டம், களக்காட்டூர் மற்றும் வேடல்.காஞ்சிபுரம் நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பாலாறு கிணறுகளில், நீர்மட்டம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.--------------------உதயம்பாக்கம் தடுப்பணை - ரூ.280 கோடி மதிப்பீடுஉதயம்பாக்கம் - படாளம் இடையே கதவணையுடன் மேல்மட்ட பாலம்நீளம் - 782 மீட்டர்பாசன நிலங்கள் - 2,139 ஏக்கர்பயன்பெறும் கிராமங்கள் - 25 -

-பாலுார் தடுப்பணை - ரூ.16.83 கோடி மதிப்பீடுநீளம் - 800 மீட்டர்பாசன நிலங்கள் - 3,967 மீட்டர்மேல்மனப்பாக்கம், மேலச்சேரி, பாலுார், தேவனுார், அரும்புலியூர், உள்ளாவூர், பினாயூர், கரும்பாக்கம், சீத்தனஞ்சேரி, குருமஞ்சேரி, சாத்தனஞ்சேரி.*தாம்பரம் - பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு பயனாக இருக்கும்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
13-ஜன-202111:59:57 IST Report Abuse
JeevaKiran இந்த பாலாறு ஆந்திராவில் தொடங்கி தமிழகத்தில் முடிகிறது. ஆந்திராவில் 27 கி.மீ. பாய்கிறது. பிறகு தமிழகத்தில் 285 கி.மீ. கடந்து கடலில் கலக்கிறது. இந்த 27 கி.மீ. ல் ஆந்திரா அரசு 29 தடுப்பணையை கட்டியிருக்கிறது. இன்னும் கூடுதலாக கட்டப்போகிறார்கள். ஆனால் தமிழகத்தில் 285 கி.மீ. ல் எத்தனை தடுப்பணைகள் உள்ளன? ஒன்றா இரண்டா? ஆந்திரா மக்களின் நலனில் அக்கறை உள்ள அரசு . இங்கு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X