திருமங்கலம் : தலையில், 'விக்' வைத்து, ஏமாற்றி திருமணம் செய்த கணவர் மீது, மனைவி அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சென்னை, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 29. இவருக்கு, 2015ல், திருமண தகவல் மையம் மூலம், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்தது. வரதட்சணையாக, 50 சவரன் நகை மட்டுமின்றி, கார் வாங்குவதற்காக, 2 லட்சம் ரூபாயை முன்பணமாக, பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.திருமணத்திற்கு பின், ராஜசேகர் தாம்பத்திய உறவில் நாட்டமின்றி இருந்துள்ளார். மனைவியின் கட்டாயத்தின்படி, ஒரு முறை தாம்பத்தியத்தில் ஈடுபட முயன்றபோது, ராஜசேகரின் தலையில் வைத்திருந்த, 'விக்' கழன்று கீழே விழுந்துள்ளது.
அப்போது தான் மனைவிக்கு, தன் கணவர், தலையில் 'விக்' வைத்து, ஏமாற்றியது தெரிந்தது. மேலும், வரதட்சணையாக வாங்கிய நகைகளை விற்று, ஊதாரியாக செலவு செய்துள்ளார். இதை தட்டிக் கேட்டபோது, ராஜசேகர் தன் மனைவியை அடித்து உதைத்துள்ளார்.இது குறித்து, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ராஜசேகரின் மனைவி, இம்மாதம், 4ம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரின்படி, போலீசார் நேற்று, மூன்று பிரிவுகளில், ராஜசேகர், தாய் ஜெகதா, தந்தை ஜெகநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE