பொது செய்தி

இந்தியா

விவசாய துறைக்கு கூடுதல் நிதி; பட்ஜெட் எதிர்பார்ப்பு

Updated : ஜன 13, 2021 | Added : ஜன 13, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: வரவிருக்கும் பட்ஜெட்டில், விவசாய துறைக்கு கூடுதல் நிதி மற்றும் ஊக்கத் தொகைகளை அரசு வழங்க வேண்டும் என, துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, வேளாண் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, பண்ணை ஆராய்ச்சி, எண்ணெய் வித்து உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், இயற்கை வேளாண்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் நிதி மற்றும் ஊக்கச் சலுகைகளை வழங்க வேண்டும்
Budget2021, agriculture, fund, Budget,பட்ஜெட்

புதுடில்லி: வரவிருக்கும் பட்ஜெட்டில், விவசாய துறைக்கு கூடுதல் நிதி மற்றும் ஊக்கத் தொகைகளை அரசு வழங்க வேண்டும் என, துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, வேளாண் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, பண்ணை ஆராய்ச்சி, எண்ணெய் வித்து உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், இயற்கை வேளாண்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் நிதி மற்றும் ஊக்கச் சலுகைகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அத்துடன், விவசாயிகளுக்கு சலுகைகளை வழங்குவதை விட, நேரடி மானிய உதவித் தொகை திட்டத்தின் மூலம் உதவிகள் செய்வது அதிக பலனளிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் வங்கி கணக்குகளில், ஆண்டுதோறும், 6,000 ரூபாய் நேரடியாக செலுத்துவது பயன் அளிப்பதாக இருக்கிறது. இந்த முறையை, மற்ற சலுகை திட்டங்களிலும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.


latest tamil newsடி.சி.எம்., ஸ்ரீராம் நிறுவனத்தின் தலைவர் அஜய் ஸ்ரீராம், விவசாயிகளுக்கு சலுகைகளை அறிவிப்பதை விட, அவர்களுக்கு நேரடியாக பணத்தை கொடுக்கும் போது, அதை அவர்கள் தேவையானவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். நல்ல விதை, புதிய தலைமுறை உரங்கள், நீரை சிக்கனமாக பயன்படுத்துவது என தேவையானவற்றை செய்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

ஆலோசனை நிறுவனமான, 'டெலாய்ட் இந்தியா,' ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அதிகமான நிதி ஒதுக்க வேண்டும் என்றும், சமையல் எண்ணெயை இறக்குமதி செய்வதை குறைத்து, உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்வதை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

'ஆர்கானிஷ் ஓவர்சீஸ்' நிறுவனத்தின் நிறுவனர், இயற்கை வேளாண்மையில், தனியார் நிறுவனங்கள் அதிகம் இடம்பெறும் வகையில், வரிச் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். குளிர் பதன வசதிகள், சேமிப்பு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தவும் சலுகைகள் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்து உள்ளார்.

இத்துடன், டீசல் மீதான வரி குறைப்பு, காய்கறி மற்றும் பழங்களுக்கு போக்குவரத்து மானியம் ஆகியவற்றை வழங்க வேண்டும்; ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு அதிக வரி விதிக்கப்பட வேண்டும் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-202111:15:20 IST Report Abuse
சம்பத் குமார் 1). விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட்.2). கொரோனா மற்றும் மருத்துவம் சார்ந்த பட்ஜெட்.3). கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பட்ஜெட்.3). சிறு குறு தொழில் கடன் சார்ந்த பட்ஜெட். இந்த வருடம் மற்றும் Cibilல் சற்று தளர்வு மற்றும் வயது வரம்பு சற்று தளர்வு உடன் கூடிய பட்ஜெட்.4). நடைபாதை வியாபாரிகளை கவரும் வகையில் கடன் வசதியுடன் பட்ஜெட். நன்றி ஐயா.
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்அம்மா போன தேர்தலுக்கு முன் நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ 5000 "கடனாக" கொடுத்தார்கள்...
Rate this:
Cancel
13-ஜன-202108:41:52 IST Report Abuse
ஆப்பு 6000 க்கு பதில் 12000 மா போட்டு விவசாயிகளின் வருமானத்தை ரெட்டிப்பாக்கிடுவாங்களோ?
Rate this:
Changes - Pkt,இந்தியா
13-ஜன-202109:26:26 IST Report Abuse
Changesதமிழ்நாட்டில் எல்லாம் டாஸ்மாக் சரக்குக்கு போகும். இங்கேதான் விவசாயம் தெரியாதவன் எல்லாம் பச்சை துண்டை போட்டுகொண்டு விவசாயி என்று வேஷம் போடுவான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X