புதுடில்லி: போகி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருவிழாவின் துவக்கமாக போகிப் பண்டிகை இன்று (ஜன.,13) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை திருவிழாவை நாடு முழுவதும் லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல் உள்ளிட்டவைகளாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், போகி பிஹு, கொண்டாடும் குடிமக்களுக்கு வாழ்த்துகள். இந்த விழாக்கள் நம் சமூகத்தில் அன்பு, பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்தி, நாட்டில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கட்டும். இவ்வாறு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Greetings and best wishes to fellow citizens on the occasion of Lohri, Makar Sankranti, Pongal, Bhogali Bihu, Uttarayan and Paush parva. May these festivals strengthen the bond of love, affection and harmony in our society and increase prosperity and happiness in the country.
— President of India (@rashtrapatibhvn) January 13, 2021
இதேபோல், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கோவாவில் உள்ள கவர்னர் மாளிகையில் தனது குடும்பத்துடன் போகி பண்டிகையை கொண்டாடினார். யாகசாலை பூஜை செய்வதுபோன்று, செங்கற்களை அடுக்கி குண்டம் அமைக்கப்பட்டு, அதில் பழைய பொருட்கள் மற்றும் கட்டைகளை அடுக்கி தீயிட்டு எரித்து போகி கொண்டாடினர். இதேபோல் பல்வேறு தலைவர்கள் தங்கள் இல்லங்களில் குடும்பத்தினருடன் போகியை கொண்டாடினர்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து செய்தி: அனைவருக்கும் லோஹ்ரி, போகி வாழ்த்துக்கள். இந்த திருவிழாக்கள் அவற்றின் வண்ணமயமான தன்மைக்கு பெயர் பெற்றவை மற்றும் நல்ல அறுவடை மற்றும் இயற்கையின் அருளைக் குறிக்கின்றன. அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவரட்டும்.
Lohri & Bhogi greetings to all! These festivals are known for their colourfulness and symbolise good harvest and bountifulness of nature. May the pious bonfires bring in happiness, good health and prosperity for all. #Lohri #Bhogi pic.twitter.com/nOnbSmDZPU
— Vice President of India (@VPSecretariat) January 13, 2021
பிரதமர் மோடி
போகி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்திஇந்த சிறப்பு நாளில் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் நிரப்ப வேண்டும் என பிரார்த்திக்கிறேன்
முதல்வர் பழனிசாமி
தமிழர் திருநாளாம் தைப்பொங்கள் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். உழவு தொழிலை போற்றும் தைப்பொங்கல் திருநாளில், மக்கள் புத்தாடை அணிந்து, இல்லங்களில் வண்ணக் கோலமிட்டு கரும்பு, மஞ்சள், இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை படையலிட்டு புதுப்பானையில் புது அரிசியிட்டு, அது பொங்கும்போது, 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாகமாக குரல் எழுப்பி, இறைவனை வணங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள் என தெரிவித்துள்ளார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE