பொது செய்தி

தமிழ்நாடு

பருவம் மாறியது மழை: பரிதவிப்பில் விவசாயிகள்: வழிகாட்டும் வேளாண் துறை

Updated : ஜன 13, 2021 | Added : ஜன 13, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
பெ.நா.பாளையம்;பருவம் தவறி பெய்யும் மழையால், பயிர்களின் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படுவதோடு,விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை எதிர்க்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறதென்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.தமிழகத்தை பொறுத்தளவில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, கோடை மழை ஆகியன விவசாயத்துக்கு பெரிதும் கைகொடுக்கிறது. இவை மூன்றும், அந்தந்த காலகட்டத்தில் பெய்தால்,
பருவமழை, காலம், விவசாயிகள், வேளாண்துறை

பெ.நா.பாளையம்;பருவம் தவறி பெய்யும் மழையால், பயிர்களின் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படுவதோடு,விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை எதிர்க்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறதென்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தளவில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, கோடை மழை ஆகியன விவசாயத்துக்கு பெரிதும் கைகொடுக்கிறது. இவை மூன்றும், அந்தந்த காலகட்டத்தில் பெய்தால், அதனால் விளையும் பயன்கள் ஏராளம்.ஆனால், பருவம் தவறி பெய்யும் மழையால், பயிர்கள் பாதிப்பதோடு, விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. தென்மேற்கு பருவமழை ஜூனில் துவங்கி செப்., வரை நீடிக்கிறது. இதில் கோவை மாவட்டம் நல்ல பயனை பெறும். கோடை மழை ஏப்., மே மாதங்களில் வெப்பசலனத்தால் பெய்யும். வடகிழக்கு பருவமழை அக்., மாதம் துவங்கி, டிச., வரை நீடிக்கும்.

கோவையின் வடபகுதியில், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் எப்போதும், அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு துடியலுார், பெரியநாயக்கன்பாளையம், காரமடை வட்டாரத்தில் அதிக அளவு பெய்துள்ளது. இருந்தாலும் பருவகாலம் முடிந்து, தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை, விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, நாயக்கன்பாளையம் விவசாயி விஜயகணபதி கூறியதாவது; தற்போது பருவம் தவறி மழை பெய்து வருகிறது. இது வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவை பயிரிட்ட விவசாயிகளுக்கு நல்ல பலனை தரும். இவைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. அவரை பயிரிட்ட விவசாயிகளுக்கு, தற்போது பூ பிடிக்கும் பருவம் என்பதால், அதிக மழை பெய்யும்போது, பூக்கள் உதிர்ந்து காய் பிடிப்பதில் சிக்கல் ஏற்படும்.


latest tamil news


சோளம் பயிரிட்ட விவசாயிகளில், தற்போது கதிர்பிடித்திருந்தால், மழை ஈரம் இறங்கி கதிர்கள் கரிபூட்டை நோயால் கறுத்துப்போகும். இதனால் விளைச்சல் குறைந்து, காய்ந்த தட்டுக்களை கால்நடைகளுக்கு போடும் நிலை ஏற்படும். மழையால், பனிக்கடலை விளைச்சலும் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


இது சரியான தருணம்


பெரியநாயக்கன்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா கூறுகையில்,'' தற்போது பெய்து வரும் மழை, கரும்பு, வாழை உள்ளிட்டவை பயிரிட்ட விவசாயிகளுக்கு சிறந்த பயனை கொடுக்கும். தற்போது, தென்னை மரத்துக்கு உரம் போட சரியான தருணம்.ரசாயன உரம், தொழு உரம், உயிர் உரங்கள் என, எந்த உரம் போட்டாலும், அதனால் தென்னை மரத்துக்கு சாதாரண காலங்களை விட, தற்போதைய மழைக்காலத்தில் அதிக பயன் இருக்கும். என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayilcity Ragu Raman - Mayiladuthurai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-202122:42:40 IST Report Abuse
Mayilcity Ragu Raman பருவம் தவறி மழை பெய்யவில்லை. இயற்க்கை அதனுடைய வேலையே சரின்யாகத்தன் செய்கிறது. எந்த வருடமும் இல்லாத அளவிற்ற்கு கடந்த வருடம் மிகப்பெரிய வானிலை மாற்றம் ஏற்பட்டதற்கு காரணம் கொரோனா என்ற நோயின் தாக்கமே அனைத்துலக அளவில் கார்ப வெளியேற்றம் மிக மிக குறைந்த அளவில் வெளியேற்றியதே காரணம். தினசரி விமான பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இதுவே மிகப்பெரிய மாற்றத்திற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இன்னும் பல... எழுத நேரமில்லை.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
13-ஜன-202121:54:05 IST Report Abuse
NicoleThomson இது போன்றதொரு மழை காலம் 21 வருடம் முன்னர் ஆகியுள்ளதாக நான் வசிக்கும் ஊரில் ஒரு முதியவர் சொன்னார் , தெரிந்தால் சொல்லுங்க
Rate this:
Cancel
13-ஜன-202111:45:05 IST Report Abuse
ஆப்பு எல்லாமந்த நேருவால வந்தது.
Rate this:
தமிழன் - Chennai,சவுதி அரேபியா
13-ஜன-202114:21:54 IST Report Abuse
தமிழன்ஆமா ஆமா நேருதான் இதற்கு காரணம்... வாங்க சங்கிகள்லா எங்கே போய்ட்டிங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X