சென்னை: குஜராத் மாநிலம், கெவடியாவில் இருந்து, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலுக்கு, புதிய வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், கெவடியாவில் இருந்து, புதன் கிழமைகளில் காலை, 9:15க்கு புறப்பட்டு, மறுநாள் மாலை, 4:00 மணிக்கு, சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் வந்தடையும்.எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு, 10:30க்கு புறப்பட்டு, செவ்வாய் கிழமை அதிகாலை, 3:00 மணிக்கு கெவடியா சென்றடையும். இந்த புதிய ரயிலுக்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE