கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மனுக்கு, கோபியில் மஞ்சள் நீர் உற்சவம், கோலாகலமாக நேற்று நடந்தது. கோபி அருகே, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், கடந்த, 7ல் குண்டம் விழா நடந்தது. இதையடுத்து, கடந்த, 9ல், பாரியூரில் இருந்து கோபிக்கு, மலர்ப்பல்லக்கில், அம்மன் விஜயம் செய்தார். நேற்று முன்தினம் தெப்பத்தேர் உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து, கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், மஞ்சள் நீர் உற்சவம் நேற்று நடந்தது. பால், இளநீர், தேன், வாசனை திரவியங்களை கொண்டு, விநாயகர் மற்றும் சூலவேலுடன் விஜயம் செய்த அம்மனுக்கு, மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE