மொடக்குறிச்சி: மொடக்குறிச்சியில் போலீஸ் டி.எஸ்.பி., அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன், பேசினார்.
சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில், ஈரோடு மாவட்டத்தில், நேற்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன், சிவகிரியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசியதாவது: தமிழக தாய்மார்கள் நினைத்துவிட்டால், 2021 சட்டசபை தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். மொடக்குறிச்சியில் போலீஸ் டி.எஸ்.பி., அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிவகிரி அரசு மருத்துவமனை சீரமைக்கப்படும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நிகழும். நான் கட்சித் தலைவன் அல்ல. தொண்டனாக இருந்து பணி செய்யவே விரும்புகிறேன். தமிழகத்தை தலை நிமிர செய்வது தான் எனது வேலை. அதற்காக மக்கள் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். மாற்றத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக லக்காபுரத்தில் நேற்று மதியம், 12:00 மணிக்கு கமல்ஹாசன் வந்தார். நூற்றுகணக்கானோர் பேச்சை கேட்க காத்திருந்தனர். ஆனால், பேச ஏற்பாடு செய்த மூன்று ஹேண்ட் மைக்குகளும், வேலை செய்யவில்லை. இதனால் கும்பிட்டபடி சென்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE