மொடக்குறிச்சி: கொடுமுடி புது மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, 2019ல் நடந்தது. இதில், ?? லட்சம் ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாக, புகார் எழுந்தது. இதையடுத்து கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், புகாருக்கு ஆளான, ?? பேருக்கு, நேற்று முன்தினம் விசாரணை அழைப்பாணை அனுப்பினார். இவர்களிடம் கோவில் வளாகத்தில், நேற்று விசாரணை நடந்தது. அதேசமயம் புகார் அனுப்பியவர்களையும், செயல் அலுவலர் அழைத்திருந்தார். மனுதாரர் ஸ்ரீவாரி கதிர்வேல், குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேர் என, நான்கு பேர் வந்தனர். மக்கள், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விசாரணை அதிகாரியாக கோவில் செயல் அலுவலர் ரமேஷ், கண்காணிப்பாளர் மாணிக்கம், கணக்கர் மாரிமுத்து இருந்தனர். புகார்தாரர், ''முறைகேடு தொடர்பான ஆவணங்கள் என்னிடம் இல்லை; பத்திரிகையில் செய்தி வெளிவந்தது,'' என்றார். அதேசமயம் குற்றம் சாட்டப்பட்டவர்கள், நாங்கள் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என தெரிவித்தார்.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ரமேஷ் கூறியதாவது: புகார்தாரரிடம் எந்த ஆதாரமும் இல்லை. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களும், உபயதாரர்கள் வழங்கிய நிதியில், தனிப்பட்ட முறையில் விழா நடத்தியுள்ளனர். முறைகேடு புகாருக்கு ஆதாரமில்லாததால், மேல் நடவடிக்கை எதுவும் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
விரிவான விசாரணை தேவை: புது மாரியம்மன் கோவில், கும்பாபிஷேக விழாவுக்கு, கட்டளைதாரர்கள் பெயரில் ரசீது வழங்கி, பல லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர். நீண்டநாள் கழித்து ஆதாரம் கேட்டால் ரசீது எங்கிருந்து வழங்கப்படும். முறைகேட்டுக்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். எல்லாவற்றையும் மூடி மறைக்க பார்க்கின்றனர். எனவே, மாவட்ட அளவிலான அறநிலையத்துறை அதிகாரிகள், விரிவான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம் என்று, மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE