பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு மின் இணைப்பு, குடோனில் சாய தொழிற்சாலை நடத்தக்கூடாது

Added : ஜன 13, 2021
Share
Advertisement
சேலம்: வீட்டு இணைப்பை பெற்று, குடோன்களில், சாய தொழிற்சாலை நடத்தினால், நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.சேலம், சீல்நாயக்கன்பட்டி, புத்துமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ராஜமுத்து சாய ஆலை, முறைகேடாக செயல்படுவதாக புகார் எழுந்தது. அங்கு, சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள், நேற்று, சோதனை மேற்கொண்டனர். அப்போது, உரிமம் இன்றி, சுத்திகரிப்பு

சேலம்: வீட்டு இணைப்பை பெற்று, குடோன்களில், சாய தொழிற்சாலை நடத்தினால், நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சேலம், சீல்நாயக்கன்பட்டி, புத்துமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ராஜமுத்து சாய ஆலை, முறைகேடாக செயல்படுவதாக புகார் எழுந்தது. அங்கு, சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள், நேற்று, சோதனை மேற்கொண்டனர். அப்போது, உரிமம் இன்றி, சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல், சாயக்கழிவை, அப்படியே கால்வாயில் வெளியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டு, உடனே, ஆலை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆலை உரிமையாளர் ராஜமுத்துக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து, கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ''சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றினால், ஆலை மூடப்படும். குறிப்பாக, வீட்டு உபயோகம், குடோன்களுக்கு மின் இணைப்பு பெற்று, சாய தொழிற்சாலை நடத்தினால், அபராதம் விதிக்க, வாரியத்துக்கு பரிந்துரைக்கப்படும். இதுதொடர்பாக, 99446 - 60309 என்ற மொபைல் எண்ணில் தகவல் தரலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X