சேலம்: மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த, அதற்கான பணிகள், முழுவீச்சில், தயார் நிலையில் உள்ளது. சேலம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில், மண்டல குளிர்பதன கிடங்கு உள்ளது. அங்கு, கொரோனா தடுப்பூசி முகாம் பணிக்கு, முன்னேற்பாடுகளை, கலெக்டர் ராமன், நேற்று, ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது: மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த, 0.5 மி.லி., அளவுள்ள சிரஞ்சுகள், ஒரு லட்சத்து, 29 ஆயிரத்து, 900 எண்ணிக்கையில் வரப்பெற்றுள்ளன. மண்டல குளிர்பதன கிடங்கில், 1.40 கோடி, 'டோஸ்' தடுப்பூசிகள் சேமித்து வைக்க, 2 வாக்-இன்-கூலர் மற்றும் ஐஎல்ஆர்., உள்ளன. சேலம் அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், குளிர்பதன மையங்கள் - 120 உள்ளன. ஒவ்வொரு மையத்திலும், ஒரு ஐ.எல்.ஆர்., ஒரு டீப் பிரிஸர் நிறுவப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்துகளை எடுத்துச்செல்ல, மையத்தில் தடுப்பூசிகளை பாதுகாக்க, 3,334 குளிர்பதன பெட்டிகள், தயாராக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அதேநேரம், தடுப்பூசி முகாம் தங்குதடையின்றி நடக்க, சீரான மின் வினியோகத்துக்கு ஜெனரேட்டர், நிபுணர்களால் குளிர்பதன இயந்திரம் பழுதாகாமல் பார்த்துக்கொள்ளுதல், தடுப்பூசி மைய பணியாளருக்கு, உரிய பயிற்சி அளித்து, முகாம் தொய்வின்றி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE