பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.86 லட்சத்துக்கு விற்பனை

Added : ஜன 13, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில், 86.73 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. அனுமன் ஜெயந்தி, மார்கழி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவர்சந்தைகளில், நேற்று, காய்கறி, பழம் வாங்க, மக்கள் கூட்டம் அலைமோதியது. அதில், சேலம் மாநகரில் உள்ள, சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி உழவர் சந்தைகளில், 133 டன் காய்கறி மூலம், 51 லட்சத்து, 61 ஆயிரத்து, 968 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

சேலம்: சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில், 86.73 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. அனுமன் ஜெயந்தி, மார்கழி அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவர்சந்தைகளில், நேற்று, காய்கறி, பழம் வாங்க, மக்கள் கூட்டம் அலைமோதியது. அதில், சேலம் மாநகரில் உள்ள, சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி உழவர் சந்தைகளில், 133 டன் காய்கறி மூலம், 51 லட்சத்து, 61 ஆயிரத்து, 968 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. அதேபோல், மாவட்டத்தில் உள்ள, ஆத்தூர், இடைப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி உழவர் சந்தைகளில், 127 டன், 199 கிலோ காய்கறி மூலம், 35 லட்சத்து, 11 ஆயிரத்து, 32 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 உழவர் சந்தைகளில், 260 டன், 199 கிலோ காய்கறி, பழங்கள் மூலம், 86.73 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X