சேலம்: சேலத்தில், நாளை மறுநாள், கறிக்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, ஜன., 15ல், இறைச்சி கூடம், கடைகள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. இதை கண்காணிக்க, நான்கு மண்டலங்களில் சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு உத்தரவை மீறி, சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் இறைச்சி கூடம், கடைகளை மூடி, 'சீல்' வைப்பதோடு, பறிமுதல், சட்டப்பூர்வ மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
* சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, ஜன., 15ல், அனைத்து மதுக்கடைகள், ஓட்டல், கிளப்களில் இயங்கும் பார், மதுக்கடையுடன் கூடிய பார் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட வேண்டும். அன்று, மதுபானம் விற்கக்கூடாது. மீறி விற்பவர் மீது, அரசு விதிப்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE