ஆத்தூர்: ஆத்தூர், துலுக்கனூரில், ஊராட்சி அலுவலக கூட்டம், நேற்று நடந்தது. அதில் பங்கேற்க, தலைவர் மருதமுத்து தலைமையில் வார்டு உறுப்பினர், தூய்மை பணியாளர் சென்றனர். அப்போது, புளிய மரத்தில் இருந்த, 'ராட்சத' தேனீக்கள் பறந்து வந்து, கடிக்க தொடங்கியது. இதில், வார்டு கவுன்சிலர் பழனிசாமி, 45, ஊராட்சி செயலர் முரளி, தூய்மை பணியாளர் புஷ்பா, அவரது கணவர் மாணிக்கம், 55, உள்பட, ஐந்து பேர் காயமடைந்து, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை பெற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE