தர்மபுரி: பெண்களை அவமதித்து பேசிய, தி.மு.க., இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதியை கண்டித்து, தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில், அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தர்மபுரி தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மத்திய கூட்டுறவு வங்கி சேர்மன் வெற்றிவேல் தலைமை வகித்தார். தர்மபுரி யூனியன் சேர்மன் செல்வம், நகர செயலாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். நல்லம்பள்ளியில், ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம், பெரியண்ணன் தலைமையிலும், பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமையிலும், காரிமங்கலத்தில், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், செல்வராஜ் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
* அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அரூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான சம்பத்குமார் தலைமை வகித்தார். இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டியில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ., தலைமையில், அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* சூளகிரி ரவுண்டானா அருகே, அ.தி.மு.க., மற்றும் மகளிர் அமைப்புகள் சார்பில், நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பெண்களை தெய்வமாக போற்றும் தமிழக கலாச்சாரத்தில், பெண்களை இழிவு படுத்துவதை ஏற்க முடியாது. அதனால், உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற இழிவான பேச்சுகளை அவர் பேசாத வகையில், கைது செய்ய வேண்டும் என, கோஷங்கள் எழுப்பினர்.
* கிருஷ்ணகிரி பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மகளிரணி செயலாளர் கல்பனா தலைமை வகித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE