தொப்பூர்: ஆந்திராவிலிருந்து கேரளாவுக்கு, ஒரு கன்டெய்னர் லாரி, மீன் பாரம் ஏற்றிக்கொண்டு, தர்மபுரி வழியாக நேற்று சென்று கொண்டிருந்தது. லாரியை ஆந்திரா, மேற்கு கோதாவரியை சேர்ந்த ரமேஷ், 35, என்பவர் ஓட்டினார். மாற்று டிரைவராக அதே பகுதியை சேர்ந்த விஜயசேகர், 37 உடன் சென்றார். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, தொப்பூர் கணவாயில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, டிரைவர் ரமேஷின் கட்டுப்பாட்டை மீறி, சாலை சென்டர் மீடியனில், லாரி மோதி கவிழ்ந்தது. இதில், ரமேஷ் மற்றும் விஜயசேகர் லேசான காயங்களுடன் தப்பினர். தகவலின்படி, சம்பவ இடம் சென்ற தொப்பூர் போலீசார், லாரியை மீட்டு விசாரித்து வருகின்றனர். சாலையில் கவிழ்ந்த மீன் லாரியால், அப்பகுதியில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE