பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்மார்ட் மொபைல் போன்கள் பெற மா.திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளிகள், ஸ்மார்ட் மொபைல் போன்கள் பெற விண்ணப்பிக்கலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 18 வயதுக்கு மேற்பட்ட உயர்கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், வேலையில்லாத பட்டதாரி மாணவ, மாணவியர், தனியார் நிறுவனங்களில்

கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளிகள், ஸ்மார்ட் மொபைல் போன்கள் பெற விண்ணப்பிக்கலாம் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 18 வயதுக்கு மேற்பட்ட உயர்கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், வேலையில்லாத பட்டதாரி மாணவ, மாணவியர், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள், ஸ்மார்ட் மொபைல்போன்களை பெறலாம். இதற்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், கல்வி படிப்பதற்கான சான்று, பணிச்சான்று, சுயதொழில் புரிவதற்கான சான்று, ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், கலெக்டர் அலுவலக வளாகத்தில், அறை எண், 23ல் இயங்கும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X