பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் தியேட்டர் உரிமையாளர்கள் விஜய் ரசிகர்களுடன் ஆலோசனை கூட்டம்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், விஜய் ரசிகர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுடன், போலீஸ் டி.எஸ்.பி., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.நடிகர் விஜய் நடித்த, 'பிகில்' திரைப்படம் கடந்த, 2019 அக்.,ல் வெளியானது. அப்போது கிருஷ்ணகிரியில் உள்ள தியேட்டர்களில், படத்தின் சிறப்பு காட்சி வெளியாக தாமதமானதால், ரசிகர்கள் சிலர், வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, 40க்கும் மேற்பட்டோர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், விஜய் ரசிகர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுடன், போலீஸ் டி.எஸ்.பி., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.


நடிகர் விஜய் நடித்த, 'பிகில்' திரைப்படம் கடந்த, 2019 அக்.,ல் வெளியானது. அப்போது கிருஷ்ணகிரியில் உள்ள தியேட்டர்களில், படத்தின் சிறப்பு காட்சி வெளியாக தாமதமானதால், ரசிகர்கள் சிலர், வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள, 'மாஸ்டர்' திரைப்படம் இன்று (ஜன., 13) வெளியாகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரியில், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விஜய் ரசிகர்களுடன், டி.எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், டி.எஸ்.பி., சரவணன் பேசியதாவது: நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ரசிகர்கள் என்ற பெயரில் யாரேனும் பிரச்னைகளில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா காலத்தில், அரசு விதித்துள்ள விதிமுறைகளை, ரசிகர்கள் பின்பற்ற வேண்டும். போலீசில், ஏற்கனவே வழக்குகள் இருப்பவர்கள், யாரேனும் வந்தாலோ, பிரச்னையில் ஈடுபட்டாலோ, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X