சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கம்பியில் பஸ் உரசி நான்கு பேர் பரிதாப பலி

Added : ஜன 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே, சாலையோர மின் கம்பி மீது தனியார் பஸ் உரசியதால், மின்சாரம் தாக்கி, நால்வர் பலியாயினர்.தஞ்சாவூர், கல்லணையில் இருந்து, நேற்று மதியம், 12:15 மணிக்கு, தனியார் பஸ் திருக்காட்டுப்பள்ளி வழியாக, தஞ்சாவூர் சென்றது. 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். வரகூர் கிராமத்தில் பயணியரை ஏற்றி, 100 மீட்டர் சென்ற நிலையில், சாலையின் இடதுபுறத்தில் சாலை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே, சாலையோர மின் கம்பி மீது தனியார் பஸ் உரசியதால், மின்சாரம் தாக்கி, நால்வர் பலியாயினர்.
தஞ்சாவூர், கல்லணையில் இருந்து, நேற்று மதியம், 12:15 மணிக்கு, தனியார் பஸ் திருக்காட்டுப்பள்ளி வழியாக, தஞ்சாவூர் சென்றது. 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். வரகூர் கிராமத்தில் பயணியரை ஏற்றி, 100 மீட்டர் சென்ற நிலையில், சாலையின் இடதுபுறத்தில் சாலை விரிவாக்கத்திற்காக, தோண்டப்பட்ட பள்ளத்தில் பஸ் இறங்கியது. சாலை விரிவாகத்திற்காக, மின் கம்பங்கள் முறையாக மாற்றி அமைக்காத நிலையில், தாழ்வாக சென்ற மின் கம்பி மீது, பஸ் உரசியது. இதில், பஸ்சில் மின்சாரம் பாய்ந்தது. இதில் முன்பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்த நடராஜன், 65; கணேசன், 55; கல்யாணராமன், 65; கவிதா, 30 ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலத்த காயமடைந்த முனியம்மாள், 52, தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மின் கம்பியில் பஸ் உரசிய நிலையில், தானாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் டிரைவர், கண்டக்டர் மற்றும், 50க்கும் மேற்பட்ட பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார், வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தினர். சாலை விரிவாக்க பணி நடப்பதால், மண் கொட்டப்பட்டு, சாலை குறுகலாக இருக்கிறது. எதிரே வந்த லாரிக்கு வழி விடுகையில், பஸ் மின் கம்பம் மீது உரசி, விபத்து நடந்தது தெரிந்தது. மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமும் விபத்துக்கு காரணம் என்பது தெரிந்தது. தனியார் பஸ் டிரைவர், ஜான் பிலோமின்ராஜ், 54, என்பவரை போலீசார் கைது செய்தனர். ராஜ்யசபா எம்.பி., வைத்திலிங்கம், திருவையாறு எம்.எல்.ஏ., சந்திரசேகரன் ஆகியோர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-ஜன-202107:46:22 IST Report Abuse
Mani . V "......சாலையின் இடதுபுறத்தில் சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பஸ் இறங்கியது. சாலை விரிவாகத்திற்காக மின் கம்பங்கள் முறையாக மாற்றி அமைக்காத நிலையில் தாழ்வாக சென்ற மின் கம்பி மீது பஸ் உரசியது. இதில் பஸ்சில் மின்சாரம் பாய்ந்தது........" இது யார் தவறு? எழவெடுத்த அதிகாரிகளின் தவறுதானே? ஏன் அவர்களை கைது செய்து ஆயுள் முழுவதும் சிறையில் தள்ளக் கூடாது? ஊழல், ஒன்றுக்கும் உதவாத அதிகாரிகளின் தவறுக்கு ஏன் பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X