பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் அரசியல் மாற்றம்: ஈரோட்டில் கமல் பேச்சு

Added : ஜன 13, 2021
Share
Advertisement
ஈரோடு: ''தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என, உங்களைப்போல நானும் கூறுகிறேன். அதற்காக, உங்களது தொண்டனாக செயலாற்றுகிறேன்,'' என, மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் பேசினார்.'சீரமைப்போம் தமிழகத்தை' பயணத்தில் ஈடுபட்டுள்ள, மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன், ஈரோட்டில், மக்கள், வணிகர்கள் சந்திப்பு கூட்டத்தில், நேற்று பேசியதாவது: ஒவ்வொரு நகரமும், தலைநகருக்கு

ஈரோடு: ''தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என, உங்களைப்போல நானும் கூறுகிறேன். அதற்காக, உங்களது தொண்டனாக செயலாற்றுகிறேன்,'' என, மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் பேசினார்.


'சீரமைப்போம் தமிழகத்தை' பயணத்தில் ஈடுபட்டுள்ள, மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன், ஈரோட்டில், மக்கள், வணிகர்கள் சந்திப்பு கூட்டத்தில், நேற்று பேசியதாவது: ஒவ்வொரு நகரமும், தலைநகருக்கு நிகரானதாக மாற வேண்டும். சென்னையில்தான் தொழில் முனைவோராக முடியும் என்பதை மாற்றி, இருக்கும் இடத்தில் தொழில்களை செய்யும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு நாம், 'நேர்மையான அரசியல் செய்வேன்' எனக்கூறும் துணிச்சல் வேண்டும். செயல்முறைகளின் ஆதாரங்களை, வாக்குறுதியாக பேசுகிறோம். அதனால்தான், எங்களது முதல் கொள்கையாக, நேர்மையை ஏற்றுள்ளோம். இருந்தும், எங்கள் கட்சியின் கொள்கை தயாராகி வருகிறது. நம் தலைமுறை, வீதிகளின் சாக்கடையில் வாழ்வதை பார்க்க முடிகிறது. அடுத்த தலைமுறைக்காவது மாற்றம் வர வேண்டும். ஈரோட்டில், ஜவுளி தொழிலுக்கு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு மானியம் வழங்குவது, உதவுவதை தர்ம காரியமாக நினைக்காமல், நம் தலையாய கடமையாக கொள்ள வேண்டும். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என, உங்களைப்போல நானும் கூறுகிறேன். அதற்காக, உங்களது தொண்டனாக செயலாற்றுகிறேன். மக்கள் வீட்டிலிருந்தபடி, லேப்டாப்பில் விண்ணப்பங்களை அனுப்பி, பலன் பெற வேண்டும். அதற்காக மடிக்கு ஒரு கணினி, இலவசமாக வழங்க இயலாது. குடும்பத்துக்கு ஒன்றாக வழங்கி, தேவை நிறைவேற்ற செய்வோம். படித்து, வேலை இல்லை என்ற நிலைக்கு மாற்றாக, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி, அவர்களே வேலை வழங்கும் நிலைக்கு உயர்த்துவோம். அனைவரும் கூடி தேர் இழுப்போம். வடமாக நானிருப்பேன். உங்கள் நேர்மையான இழுப்புக்கெல்லாம் நான் வருவேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X