சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்செங்கோட்டில் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் தற்கொலை

Added : ஜன 13, 2021
Share
Advertisement
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், தனியார் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள, தனியார் கலை அறிவியல் கல்லூரியில், மோகனூர் கலைவாணி நகரை சேர்ந்த ஆனந்த், 40, உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி வந்தார். இவர் மனைவி கவுரி, 30, அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு சர்வேஸ்அர்ஜீன், 10, என்ற மகன், இரண்டு மாத

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், தனியார் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள, தனியார் கலை அறிவியல் கல்லூரியில், மோகனூர் கலைவாணி நகரை சேர்ந்த ஆனந்த், 40, உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி வந்தார். இவர் மனைவி கவுரி, 30, அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு சர்வேஸ்அர்ஜீன், 10, என்ற மகன், இரண்டு மாத பெண் குழந்தை உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த, 9ல், வீட்டில் இருந்து சென்ற ஆனந்த் மீண்டும் திரும்பவில்லை. குடும்ப தகராறில், மொபைல்போனை வீட்டிலேயே வைத்து விட்டு, ஆனந்த் சென்றதால், குடும்பத்தினரால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. கோபத்தில் சென்றவர் திரும்பி வந்து விடுவார் என இருந்தனர். இந்நிலையில் நேற்று மதியம், கல்லூரி விடுதி அறையில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, அங்கு சென்று பார்க்கையில், மின் விசிறியில் நைலான் கயிற்றில், ஆனந்த் தூக்கிட்டு இறந்து கிடந்தார். திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X