தமிழ்நாடு

ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாற்றி வழிபாடு: நாமக்கல்லில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார், நாமக்கல் ஆஞ்சநேயர்.நாமக்கல்லில், ஒரே கல்லால் உருவான, 18 அடி உயரத்தில் எழுந்தருளிய ஆஞ்சநேயர், நின்ற நிலையில், சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும், மார்கழி அமாவாசை, மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக

நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார், நாமக்கல் ஆஞ்சநேயர்.


நாமக்கல்லில், ஒரே கல்லால் உருவான, 18 அடி உயரத்தில் எழுந்தருளிய ஆஞ்சநேயர், நின்ற நிலையில், சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும், மார்கழி அமாவாசை, மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, நேற்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. காலை, 5:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர், ஒரு லட்சத்து, எட்டு வடை மாலை சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு எண்ணெய், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள், வரிசையில் நின்று, ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். சமூக இடைவெளியில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில், காலை, 5:00 முதல், இரவு, 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். எஸ்.பி., சக்திகணேசன் தலைமையில், 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X