ஊரடங்கில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல அழைத்து சென்ற மனைவி

Updated : ஜன 13, 2021 | Added : ஜன 13, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
ஒட்டாவா: ஊரடங்கு விதிமுறையில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல சங்கிலி மாட்டி நடைப்பயிற்சி சென்ற பெண், போலீசிடம் சிக்கியுள்ளார்.கொரோனா பரவல் காரணமாக கனடாவில் நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அத்தியாவசிய பணியாளர்கள்,
Canada, Woman, Dog, Husband, Curfew, கனடா, கணவர், மனைவி, நாய், நடைப்பயிற்சி

ஒட்டாவா: ஊரடங்கு விதிமுறையில் இருந்து தப்பிக்க கணவரை நாய் போல சங்கிலி மாட்டி நடைப்பயிற்சி சென்ற பெண், போலீசிடம் சிக்கியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கனடாவில் நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அத்தியாவசிய பணியாளர்கள், செல்லப்பிராணிகளுடன் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டும் ஊரடங்கில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கியூபெக் நகரின் ஷெர்ப்ரூக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை நாயாக பாவித்து நடைபயிற்சி சென்று போலீசிடம் மாட்டியுள்ளார்.


latest tamil news


செல்லப்பிராணிகளை நடைபயிற்சி செல்லலாம் என கூறப்பட்டதால், தனது கணவரின் கழுத்தில் சங்கிலியை மாட்டி வீதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளார். இதனை கவனித்த போலீசார் அவரிடம் கேட்டதற்கு, ‛நான் எனது செல்லப்பிராணியுடன் தான் நடைப்பயிற்சி செல்கிறேன்,' என்றுள்ளார். அரசின் அறிவிப்பை மீறியதற்காக தம்பதியர் இருவர் மீதும் விதிமீறலுக்கான வழக்கு பதிந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.3.44 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
14-ஜன-202110:46:20 IST Report Abuse
கல்யாணராமன் சு. இந்த செய்தி வைரலாக வருவதற்காகவே பதியப்பட்டது போல் தோன்றுகிறது ... வைரல் பண்ணுவதற்கு மக்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை நினைத்தாள் சிரிப்புதான் வருகிறது .......
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-ஜன-202117:34:26 IST Report Abuse
J.V. Iyer இந்த குளிரில் யார் இரவில் நடைப்பயிற்சி செய்வார்கள்? கஷ்டம். கஷ்டம்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜன-202115:39:33 IST Report Abuse
Endrum Indian கணவன் செல்லப்பிராணி ???சரி தானே அப்படித்தானே எல்லா மனைவிமார்களும் நினைக்கின்றார்கள் இங்கு
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்பெரிய இடங்களில் செல்ல பிராணிகளே கணவன்மார்களாக கொஞ்சப் படுகின்றனவே...
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜன-202117:38:45 IST Report Abuse
Endrum Indianஇல்லை அதற்கும் பலப்பல படி மேலே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X