ஹாசன்:''பெங்களூரு - மங்களூரு இடையேயான, தேசிய நெடுஞ்சாலை - 75ல், நடக்கும் பணிகள், 2022 க்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என உணவு, பொது வினியோகத்துறை அமைச்சர் கோபாலய்யா தெரிவித்தார்.
ஹாசன் மாவட்டம், ஆலுர் பைராபுரா திருப்பத்தில், நடக்கும் சாலை பணிகளை, அமைச்சர் கோபாலய்யா, நேற்று பார்வையிட்டார்.பின் அவர் கூறியதாவது:பெங்களூரு - மங்களூருக்கு, இணைப்பு ஏற்படுத்தும், தேசிய நெடுஞ்சாலை - 75ல், அபிவிருத்தி பணிகள் நடக்கிறது. பணிகளை, 2022 க்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.மாதந்தோறும், பணிகள் ஆய்வு செய்யப்படும். இதற்கு தேவையான நிதியுதவி, பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
மங்களூருக்கு, இணைப்பு ஏற்படுத்தும் முக்கியமான, சாலை என்பதால், எம்.பி., நளின் குமார் கட்டீல், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேசினார்.இதற்கு முன் பணிகளை மேற்கொண்ட, ஒப்பந்ததாரர் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். புதிதாக டெண்டர் கோரி, பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணிகளை ஆய்வு செய்து, படிப்படியாக ஒப்பந்ததாரருக்கு, பில் தொகை வழங்கப்படும்.மழைக்காலம் வருவதற்குள், சாலை பள்ளங்களை, மூடும்படி, உத்தரவிட்டேன். 2022 ஏப்ரல் வேளையில், நெடுஞ்சாலை பணிகள் முடிவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE