தங்கவயல்: தங்கவயல் தமிழ்ச் சங்கம் சார்பில், நாளை பொங்கல் விழா நடக்கிறது. வழக்கம் போல் நடக்கும், தமிழர் பண்பாட்டு கலாச்சார ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன் கூறியதாவது:தங்கவயலில், 37 ம் ஆண்டு பொங்கல் விழா, எளிமையாக கொண்டாடப்படும். ஆண்டு தோறும் நடத்தப்படும்தமிழர் பண்பாட்டு கலாச்சார ஊர்வலம், இவ்வாண்டு ரத்து செய்யப்படுகிறது.புதுப்பிக்கப் பட்ட, தமிழ் சங்க கட்டடத்தை, நகராட்சி தலைவர் முனிசாமி திறந்து வைக்கிறார்.
தமிழ்ச்சங்க நூலகத்துக்கு, 1,000 புத்தகங்கள் வழங்கிய மெல்கி சாதுராக், வில்சன் பிரபாகர் ஆகியோருக்கு, 'தமிழ்மாமணி விருது' வழங்கப்படுகிறது.பேராசிரியர் கிருஷ்ணகுமார் தலைமையில் முத்தமிழ்க் கொடியை அன்பானந்தன்; திருவள்ளுவர் கொடியைஅனந்த கிருஷ்ணன் ஏற்றுகின்றனர்.திருவள்ளுவர் சிலைக்கு, கமல் முனிசாமி, மாலை அணிவிக்கிறார். தமிழின் சிறப்புகள் பற்றிவக்கீல்கள் ஜோதிபாசு, கிருஷ்ணமூர்த்தி, கோ.வி.திருவரங்கம் ஆகியோர் பேசுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE