உடுப்பி: முன்னறிவிப்பின்றி வீடு கட்ட அடித்தளம் அமைக்க, தனது பெட்டி கடையை அகற்றியதை கண்டித்து, அடித்தளம் அமைத்த பகுதியில், பெண்ணொருவர் படுத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
உடுப்பி மாவட்டம், உதயாவரை சேர்ந்தவர், வனிதா, 35. அதே பகுதியில், பல ஆண்டுகளாக, சிறிய பெட்டி கடை நடத்தி வருகிறார்.அவர் வைத்திருந்த கடை அருகில், ஒரு குடும்பத்தினர், புதிதாக வீடு கட்ட திட்டமிட்டனர். அடித்தளம் அமைப்பதற்காக, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, வனிதாவின் கடையை அகற்றி விட்டனர்.இரவோடு இரவாக அடித்தளம் அமைத்து விட்டனர். ஜன., 10ல் காலை, வழக்கம் போல், வியாபாரம் செய்த இடத்துக்கு வந்த போது, பெட்டி கடை இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வீடு கட்டுவோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வனிதா, அடித்தளம் அமைத்த பகுதியில், படுத்து கொண்டார்.தகவலறிந்து அங்கு வந்த போலீசார், வனிதாவை சமாதானப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE