கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை கொன்ற மனைவி கைது

Added : ஜன 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
குனிகல்: இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கொலை செய்து, வெளியூர் சென்றதாக நாடகமாடிய மனைவியும், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகா, பி.ஹொசஹள்ளி கிராமத்தை சேர்ந்த, சிவலிங்கையா, 46, பல ஆண்டுகளாக, பெங்களூரு, மாதநாயகனஹள்ளி, தோடதகுட்டதஹள்ளியில் வசித்தார். 'பாஸ்ட் புட்' கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஷோபா, 44. இரண்டு

குனிகல்: இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கொலை செய்து, வெளியூர் சென்றதாக நாடகமாடிய மனைவியும், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.

துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகா, பி.ஹொசஹள்ளி கிராமத்தை சேர்ந்த, சிவலிங்கையா, 46, பல ஆண்டுகளாக, பெங்களூரு, மாதநாயகனஹள்ளி, தோடதகுட்டதஹள்ளியில் வசித்தார். 'பாஸ்ட் புட்' கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஷோபா, 44. இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஷோபாவுக்கு, கமலாநகரின் ராமா, 43, என்பவர், பல ஆண்டாக அறிமுகம் உள்ளவர். இந்த அறிமுகம், கள்ள தொடர்பாக மாறியது.கணவரின் மனதை கரைத்து, ராமாவை தன் வீட்டிலேயே ஷோபா, வேலைக்காரராக சேர்த்துக்கொண்டார். வெளியே சந்தித்து வந்த இவர்கள், பணிக்கு சேர்ந்த பின், வீட்டுக்குள்ளேயே உல்லாசமாக இருந்தனர்.சமிபத்தில், இவர்கள் நெருக்கமாக இருந்த போது, ஷோபா கணவர், சிவலிங்கையாவிடம் சிக்கினர். மனம் நொந்த இவர், குடிப்பழக்கத்து்க்கு ஆளானார். தினமும் குடித்து வந்து, சண்டை போட்டார். இதனால், கணவரை கொலை செய்ய, மனைவி திட்டமிட்டார்.

சிவலிங்கையாவை, 2020 ஜூன் 1ல், கொலை செய்து, யாருக்கும் தெரியாமல், வீட்டின் அருகில் குப்பை குவிந்துள்ள இடத்தில், பள்ளம் தோண்டி புதைத்தனர்.சிவலிங்கையாவை காணாத, அவரது சகோதரர் புட்டராஜூ, ஷோபாவிடம் விசாரித்தார். பணி நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளதாக கூறினார்.அவரது பேச்சு, நடத்தையில் சந்தேகமடைந்த புட்டராஜ், அவரது பெற்றோர் மாதநாயகனஹள்ளி காவல் நிலையத்தில், புகார் செய்தனர்.போலீசார், விசாரணையை துவக்கியதும், ஷோபா, ராமா தலைமறைவாகினர். இருவரையும் கண்டுப்பிடித்து, விசாரித்த போது சிவலிங்கையாவை கொலை செய்ததை, ஒப்புக்கொண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-202114:44:19 IST Report Abuse
S.Krishnan, Coimbatore வாழ்க கள்ளக்காதல் 😭 ஒழிக நல்லக்காதல் 🙃 ஓங்குக இந்தியாவின் புகழ் 😡
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X